முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ள நிலையில், இலங்கையின் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் சரித் அசலங்கா பஞ்சாப் அணியில் இணையவுள்ளதாக தகவல்.

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவரால் அணி எதிர்பார்த்த அளவுக்கு சரியாக விளையாட முடியவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நடப்பாண்டு 7 போட்டிகள் விளையாடிய அவர் ஒரு அரை சதம் கூட விளாசவில்லை.
7 போட்டியில் மொத்தமாக சேர்த்தே அவர் 48 ரன்கள் எடுத்து மோசமான பார்மில் தான் இருக்கிறார். 7 போட்டிகளுக்கு பிறகு க்ளென் மேக்ஸ்வெல் தனது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 போட்டிகள் விளையாடாமல் இருந்தார். எனவே, ரசிகர்கள் பலரும் க்ளென் மேக்ஸ்வெல்க்கு என்ன தான் ஆச்சு? அவர் எப்போது திரும்பு கம்பேக் கொடுப்பார் என மிகவும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தான் இப்போது ஒரு தகவலானது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளார். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக க்ளென் மேக்ஸ்வெல் இந்த முடிவினை எடுத்திருக்கிறார். இந்த சீசன் பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக செய்யல்லப்பட்டு இதுவரை 6 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
இன்னும் 4 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் 2 போட்டியில் வெற்றிபெற்றது என்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். எனவே, இந்த மாதிரியான முக்கியமான சூழ்நிலையில் க்ளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகி இருப்பது என்பது பஞ்சாப் அணிக்கு பின்னடைவான ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. அவர் பார்மில் இல்லை என்றாலும் கூட எப்போது வேண்டுமானாலும் அதிரடி பார்முக்கு திரும்ப கூடிய வீரர்.
எனவே, அவரை போல ஒரு வீரர் இல்லை என்பது ரசிகர்களுக்கும் ஒரு சோகமான விஷயமாக தான் உள்ளது. க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இலங்கையின் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் சரித் அசலங்காவை பஞ்சாப் தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் இருந்தார். ஆனால் சமீபத்திய போட்டிகளில் அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார் எனவே அவரை பஞ்ஜாப் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.