நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை தான் யாரையும் காதலிக்கவில்லை இனிமேல் காதலிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன், அடுத்ததாக வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடித்து வருகிறார். ஐபிசி 376, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் திரையங்குகளில் வெளியாகவுள்ளது. தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் “எதிர்காலத்தில் நடப்பது என்னவென்று தெரியாது. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை இனிமேல் காதலிப்பேனா என்று தெரியவில்லை. என்னுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று என்னால் கணிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…