மறைந்த நடிகை சித்ராவின் முதல் திரைப்படமான கால்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா.சமீபத்தில் இவர் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படம் “கால்ஸ்”. இந்த படத்தில் சித்ரா கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.திரைப்பட கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஜே.சபரீஷ் என்பவர் இந்த படத்தினை இயக்குகிறார்.மேலும் காவிரி செல்வி மற்றும் ஜெயக்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.சுந்தராஜன் ,வினோதினி , ஸ்ரீரஞ்சனி மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் மறைந்த சித்ராவின் முதல் திரைப்படமான கால்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது .அதில் கால் சென்டரில் வேலை செய்யும் பெண்ணை கடத்தி 5 பேர் கற்பழித்து கொலை செய்கிறார்கள் . அவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது தான் கதை .பெண்ணை இழந்து தவிக்கும் பெற்றோரின் மனநிலை மற்றும் பெண்ணாக பிறந்து சமூகத்தில் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும் அழகாக கூறியுள்ள இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…