எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.! ஜகமே தந்திரம் பர்த்டே பரிசு.!

தனுஷின் பிறந்தநாள் பரிசாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு Y NOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ரகிட ரகிட பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு விவேக், தனுஷ்,, ரிச்சர்ட், அந்தோனி தாஸன் ஆகியோர் வரிகள் எழுத தனுஷ், தீய் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். செம மாஸ்ஸான அந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025