சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னை போன்றவர்களை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் மூலம் பெரிய திரையில் ஹீரோவாக்கிப் பார்த்தார். இதையடுத்து ரியோ, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இதனிடையே இப்படத்தில் இருந்து என்னோடு வா பாடல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில், ரியோ ராஜ் 2 புகைப்படங்களை ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை பட ப்ரொமோஷனில் விஜேவாக இருந்தேன். தற்போது சிவகார்த்திகேயனால் ஹீரோவாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…