காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன் என்று என்னுடைய பாடல் வரிகளை மாற்றி அனுப்பியதாக வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல் டீசல் விலையானது கடந்த 9-ஆம் தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியது.பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் இயற்கை படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்’ என்ற பாடல் வரிகளை மாற்றி ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என்ற வரிகளுடன் மீம்ஸ்களை பகிரப்பட்டுள்ளன.அதனை அந்த பாடல் வரிகளை எழுதிய கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது .இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கவிஞர் வைரமுத்து, என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்.’காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…