இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகன் ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வழங்கும், ‘புவியின் இளம் சாதனையாளர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா சபையானது, அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஐ.நா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சிறந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, அதை செயல்படுத்தும் இளம் தொழில் அதிபர்களுக்கு, ‘புவியின் இளம் சாதனையாளர்’ என்ற விருதை வழங்கி வருகிறது.
இதனையடுத்து இந்த ஆண்டு, இந்த விருதுக்கு இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகன் உட்பட 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஆண்டுதோறும் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், மோகன் 2018-ம் ஆண்டு, ‘டகாசார்’என்ற நிறுவனத்தை, கெவின் என்பவருடன் இணைந்து துவங்கினார்.இந்த நிறுவனமானது விவசாயிகள் விவாசாய கழிவுகளை எரிப்பதை தடுப்பதோடு, அதனை வருமானமாக்கும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறது. மேலும் விவசாயிகளிடமிருந்து வைக்கோல், உமி, தேங்காய் நார்கள் ஆகியவற்றைக் இந்த நிறுவனம் வாங்கி, கரி தயாரிக்கிறது.
இதனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு, காற்று மாசு கட்டுப் படுத்தப்படுகிறது. இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகனின் இந்த பணியை பாராட்டி, ஐ.நா. இவருக்கு புவியின் இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…