BREAKING:கொரோனாவால் ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு .!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, குவைத், இலங்கை மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் இருந்த 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இவர்களில் ஈரானில் 255 இந்தியர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான இந்தியர் ஒருவர் இறந்துள்ளார் எனவெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது .
கொரோன வைரஸ் இந்தியாவில் 173 பேரை தாக்கியுள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதனால் பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025