இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாஸாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது விலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.80 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாலியல் சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, கைலாஸா தனி தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதில் குடியேறி அதனை தனி நாடாகவும் அறிவித்திருந்தார். இது குறித்து அவர் அவ்வப்போது சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நித்தியானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாஸாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், இதேபோன்று ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளிலும், கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இந்த நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…