ஈரான், அமெரிக்கா இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது.அதில் பயணிகள் , விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்த 2 கருப்புப்பெட்டிகளை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது என அறிய விரைவில் கருப்பு பெட்டியை ஆய்வு செய்யப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப்பெட்டியை விமானம் தயாரித்த போயிங் நிறுவனத்திற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ கொடுக்க முடியாது என திட்டவட்டமாக ஈரான் கூறியுள்ளது.
சர்வதேச விதிகளின்படி எந்த நாட்டில் விமானம் ஏற்பட்டாலும் அந்த நாடு தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கருப்புப் பெட்டியை சோதனை செய்யும் வசதி அமெரிக்கா, பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…