பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறாரா பாலாஜி.?

பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டியை மரியாதை குறைவாக பேசியதற்காக பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் வாக்குவாதங்களும் , சண்டைகளும் என்று சுவாரசியமாக போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தந்திரமாக விளையாடும் போட்டியாளர் பாலாஜி .
அதற்கு உதாரணமாக முதல் வாரத்தில் அம்மா, அம்மாவை குறித்து தவறாக கூறிய பாலாஜி அடுத்த சில தினங்களில் மாற்றி பேசியுள்ளார் . இது பலர் மத்தியில் அவரிடம் இருந்த நம்பிக்கையை இழக்க செய்துள்ளது . இந்த நிலையில் சமீபத்தில் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சனம் அவர்களை தரக்குறைவாக பேசியதற்காக பாலாஜி அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
இந்த தகவல் வதந்தி என்றும் சிலர் கூறுகின்றனர் . ஆனால் கடந்த 2 சீசனிலும் பெண்களை மரியாதை குறைவாக பேசியதற்காக சரவணன் மற்றும் மகத் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பாலாஜி மற்ற பெண்களிடம் மரியாதை செலுத்துவதாகவும்,சனம் ஷெட்டி தூண்டியதாலையே பாலாஜி உணர்ச்சி வசப்பட்டதாகவும் பாலாஜி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . பாலாஜி வெளியே செல்கிறாரா இல்லையா என்பதை வரும் தினங்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025