இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியது.இரு தரப்பினரும் நடத்திய அத்தாக்குதலில் இதுவரை 200 க்கும் பேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்னர்.
ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை தடை விதித்தது.இதன்காரணமாக,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.இதுதான் இந்த 11 நாட்கள் நடைபெற்ற தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை இஸ்ரேல் தனது எல்லையில் வைத்துள்ள நவீன தடுப்பு ராக்கெட்கள் மூலம் உள்ளே நுழைய விடாமல் தடுத்தது.அதையும் மீறி வந்ததில் இஸ்ரேலில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.இதில் கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என “ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் ஊடக ஆலோசகர் தாஹர் அல்-நோனோ ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.இந்த காசா உடன்படிக்கைக்கு ஆதரவாக தனது பாதுகாப்பு அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கூறியது, ஆனால் செயல்படுத்தும் நேரம் இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.
கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…