தீ பிடிக்கும் வகையிலான பலுன்களை ஹமாஸ் அமைப்பினர் பறக்கவிட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹு அவர்களின் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இடையே அடிக்கடி வான்வெளி தாக்குதல் மற்றும் பயங்கரவாத மோதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் கடந்த மாத இறுதியிலேயே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று இவர்களுக்கிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. தற்போது இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியை பிடித்துள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன், நாப்தலி பென்னட் அவர்கள் இஸ்ரேலின் புதிய பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காசாவில் வான்வழி தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேல் ராணுவம் தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் தீ பிடிக்கும் வகையிலான பலூன்களை பறக்கவிட்டதாகவும், அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் காசா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…