டாக்டர் படம் வெளியீட திட்டமிட்டிருந்த மார்ச் 26 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்
இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட சில படங்களின் குழப்பம் ஏற்பட்டு சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் இந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுவதாகவும் , படக்குழுவினர் அனைவரிடமும் பேசி விரைவில் டாக்டர் படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் சில நாட்களிற்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது டாக்டர் படம் வெளியீட திட்டமிட்டிருந்த மார்ச் 26 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. விரைவில் இந்த ஜகமே தந்திரம் படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜகமே தந்திரம் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…