சாதித்த ஜப்பான்.! நிலவில் தரையிறங்கிய 5வது நாடு.! புகைப்படம் இதோ…

Published by
மணிகண்டன்

நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5வது நாடாக பெருமை கொண்டுள்ளது ஜப்பான். ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) கடந்த வருடம் செப்டம்பரில் ஸ்லிம் எனும் Smart Lander for Investigating Moon எனும் விண்கலத்தை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக விண்ணில் ஏவியது.  அதற்கு முன்னர் 3 முறை இந்த விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

உக்ரைன் போர்க் கைதிகள் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விபத்து..!

விண்ணில் ஏவப்பட்ட ஸ்லிம் (SLIM) விண்கலம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி நள்ளிரவில் நிலவை சென்றடைந்தது. ஆனால் நிலவில் தரையிறங்காமல் இருந்து வந்தது. இதனால் ஸ்லிம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் தருணத்தை எதிர்நோக்கி ஜப்பான் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் காத்திருந்தனர்.  அந்த வரலாற்று நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு பற்றி ஜப்பான் விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகையில், “எங்களுக்கு தரவு பற்றிய விரிவான விவரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு  ‘பின்பாயிண்ட்’ தரையிறக்கமானது 10 முதல் 12 அடி வரை உள்ளது என்றும், நிலவின் மேற்பரப்பின் படத்தில் காட்டப்பட்டது போல சந்திரனின் பள்ளத்தின் மென்மையாக சாய்ந்தபடி லேண்டர் உள்ளது என்று கூறியுள்ளனர்.

லேண்டரின் இரண்டு முக்கிய என்ஜின்களில் ஒன்று டச் டவுனின் இறுதி கட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கலாம், லேண்டர் நிலவில் சரிவாக இருப்பதன் காரணமாக மேற்கு நோக்கிய கோணத்தில், உள்ளது. இதனால் SLIM இன் சோலார் பேனல்களால் தற்போது மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை, ஆனால் சூரிய ஒளியின் திசையில் மாற்றம் அடையும் போது, மின்சாரம் பெற்று மீண்டும் லேண்டரை இயக்க முடியும் என்று JAXA ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் , அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5வது நாடாக ஜப்பான் வரலாற்று நிகழ்வில் இடம்பெற்றது. அமெரிக்கா உதவியுடன் ஸ்லிம் லேண்டரை ஜப்பான் விண்னில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago