நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜன கண மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஜன கண மன திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் சென்று எடுக்கப்படவுள்ளதால், நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த படத்தில் நடிப்பதற்கிடையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியகியுள்ளது.
இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இயக்குனர் எம் ராஜேஷுடன் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கும், ஜெயம் ரவியின் மூன்று படங்களுக்கும் இசையமைத்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட ஆண்டுகள் கடந்து மிகப்பெரிய ஹிட் கொடுக்காத எம் ராஜேஷ் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…