Jovika vijaykumar [file image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டு கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஜோவிகாவுக்கு பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனை மகிழ்ச்சியுடன் நடிகை வனிதாவே தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்த ஜோவிகா தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ” எனக்கு ஆதரவு கொடுத்த மக்கள் அனைவருக்கும் இந்த சமயம் நான் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை வரவேண்டும் என்று நினைத்தவர்களுக்காக இதனை சொல்கிறேன். அவர்கள் எல்லாருக்கும் ரொம்பவே நன்றி.
பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!
நான் வீட்டில் இருந்து வெளிய வந்ததை நினைத்து யாரும் கவலை படவேண்டாம். ஏனென்றால், நான் என்னுடைய அம்மாவை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. அதனால் என்னுடைய நேரத்தால் நான் வெளியே வந்துட்டேன். என்னுடைய அம்மா தான் என்னுடைய உலகம் அவரை கவனித்து கொள்வது என்னுடைய கடமை. வீட்டிற்குள் இருக்கும்போதே எனக்கு இது தோன்றிவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் நான் கற்றுக்கொண்ட விஷயம் பல அது எல்லாம் நான் மறக்கவே மாட்டேன். அந்த அளவிற்கு நல்ல அனுபவத்தையும் இந்த பிக் பாஸ் எனக்கு கொடுத்து இருக்கிறது. வீட்டிற்குள் இருக்கும் அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்து கொள்கிறேன். வீட்டிற்குள் சிறந்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த தவறுகளை நினைத்து நான் ஒரு போதும் வருத்தமாட்டேன்” எனவும் கடிதத்தில் ஜோவிகா எழுதியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 60 நாட்கள் வீட்டில் இருந்த ஜோவிகாவுக்கு சம்பளமாக 10 லட்சம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…