அக்டோபர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாகும் க/பெ.ரணசிங்கம்
விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனத் தகவல் இணயதளம் முழுவதும் பரவியது. ஆனால், படக்குழுவினரோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது, க/பெ. ரணசிங்கம் திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2ம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதற்காண அதிகார்வ பூர்வ அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…