இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் கொண்ட தென்னிந்தியா நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு மிக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகைகளின் பட்டியலில் நடிகை காஜல் அகர்வால் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அவரை நடிகை ராஷ்மிகா மந்தனா பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ராஷ்மிகா 19.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார். தற்போது, இவருக்கு அடுத்த படியாக காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் ப்ரித் சிங், ஸ்ருதிஹாசன், ஆகியோர் உள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…