இந்தி மெகா ஹிட் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அருண்ராஜா காமராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடகர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். ரஜினியின் ஹிட் பாடலான நெருப்புடா பாடலின் மூலம் பிரபலமானவர். அதனையடுத்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தின் மூலம் இயக்குனரானார் அருண்ராஜா காமராஜ். இந்த படத்திற்காக பல விருதுகளை வென்றார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு ஹிட் பாடலை எழுதியுள்ளார். ஆம், விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ்.
சமீபத்தில் இந்தி மெகா ஹிட் படமான ‘ஆர்டிகிள் 15’ படத்தினை தமிழில் ரீமேக் செய்வதாகவும், அதன் ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கி தயாரிக்க இருப்பதாகவும், மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தான் இது தொடர்பான அறிவிப்பு எல்லாம் வெளிவர வேண்டும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து இவர் ஆர்டிகிள் 15 ரீமேக்கை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்த இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…