தமிழ் சினிமாவின் நவரச நாயகனான கார்த்திக் மீண்டும் தி இவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்று கூறும் கார்த்திக் முத்துராமன் 80,90ஸ்-களில் பல படங்களில் ஹீரோவாக நடித்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.அதன் பின் சினிமாவிலிருந்து விலகிய இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
அதன் பின் ஒரு காலத்தில் குணசித்திர நடிகராக ஒரு சில படங்களில் நடித்த கார்த்திக் தற்போது ஹீரோவாக என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கி வருகிறார்.
தி இவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திகற்கு ஜெயமுருகனே இசையமைத்து இருப்பதோடு படத்தின் கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் கார்த்திக்குடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படமானது அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் வகையிலும் ,உயிரை விட மானமே பெரிது என்பதை உணர்த்தும் விதமாக உருவாகி வருவதாகவும், இந்த படத்திற்கான 70% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இயக்குனர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக்கை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…