கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளதாகவும், ‘சாணிக் காயிதம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து ‘குட் லக் சகி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.அதனையடுத்து இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘ராக்கி’ என்ற படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சாணிக் காயிதம்’ என்று பெயரிடப்பட்டு தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த படத்தின் மூலம் இயக்குநரான செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் சினிமாவுலகிற்கு தந்த செல்வராகவனின் இந்த புதிய முயற்சிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…