ட்விட்டர் பயனாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு.. இனி ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடலாம்!

ட்விட்டர் நிறுவனம், தனது பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டோரி அப்டேட்ஐ தற்பொழுது வெளியிட்டது. மேலும் அதற்க்கு “பிளீட்” (Fleet) என பெயரிட்டனர்.
தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும், அந்த நிறுவனங்கள் தங்களின் பயனாளர்களுக்கு பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வருகின்றனர்.
இதேபோலவே, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனமும் “ஸ்டோரி” அப்டேட்டை வழங்கியுள்ளது. அதற்க்கு “பிளீட்” (Fleet) என பெயரிடத்து. ட்விட்டர் பயனாளர்கள் பலரின் நீண்ட நாள் கோரிக்கையான இதை ட்விட்டர் நிறுவனம் ஏற்று, இந்த அப்டேட்டை வழங்கியுள்ளது. ட்விட்டர் ஃப்ளீட் மூலம் போட்டோக்கள், செய்திகள், GIF படங்கள், உள்ளிட்டவைகளை பகிர முடியும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிளீட், 24 மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும் எனவும், இதனை லைக்கோ, ரீட்வீட்டோ செய்ய முடியாது என்றும், தனிப்பட்ட முறையில் கமெண்ட் மட்டும்தான் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், நீங்கள் பதிவிட்ட பிளீட்டை யாரெல்லாம் பார்த்தார் என்பதையும் நீங்கள் பார்க்கலாம். இந்த அப்டேட், ட்விட்டர் செயலி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. இணையதளங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களால் இந்த வசதியை பயன்படுத்த முடியாது என ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த அப்டேட் தற்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025