சிம்பு நடித்து வரும் மாநாடு படமும் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படமும் மே 12 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இந்த மாதம் முதல் நடைபெற இருப்பதும், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மாநாடு திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதைபோல் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்பதால் எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…