எஞ்சின் கோளாறு; 600 கார்களை திரும்ப பெறும் – மஹிந்திரா நிறுவனம் ..!

Published by
Edison

நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்ட 600 டீசல் என்ஜின் கார்களை திரும்ப பெறுவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், என்ஜின் கோளாறு காரணமாக தனது 600 டீசல் கார்களை  திரும்ப அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த வாகனங்கள் ஜூன் 21 முதல் 2021 ஜூலை 2 வரை அதன் நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்டதாக மஹிந்திரா நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,மும்பையைச் சேர்ந்த மஹிந்திரா கார் உற்பத்தியாளர் ஒருவர்,  கார்களில் உள்ள தவறான டீசல் என்ஜின்களை ஆய்வு செய்து மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

“அசுத்தமான எரிபொருள் காரணமாக பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாகனங்களின் என்ஜின்களை மஹிந்திரா நிறுவனம் ஆய்வு செய்து மாற்றும்.

மேலும்,பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீசல் என்ஜின்களில் ஆய்வு மற்றும் தேவையான மாற்றங்கள் இலவசமாக மேற்கொள்ளப்படும். இதற்காக, நிறுவனத்தால் அவர்கள் தனித்தனியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள் “,என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும்,எந்த வகையான கார் மாடல்களின் என்ஜின்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மஹிந்திரா நிறுவனம் குறிப்பிடவில்லை.

மஹிந்திரா நிறுவனம்:

மஹிந்திரா நிறுவனம் நாட்டின் ஐந்தாவது பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளராக உள்ளது. இது தற்போது தார் எஸ்யூவி, ஸ்கார்பியோ, மர்ராசோ மற்றும் எக்ஸ்யூவி 300 போன்ற பயன்பாட்டு வாகனங்களை நாசிக் தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிறது.

கடந்த வாரம், மஹிந்திரா இந்திய வாடிக்கையாளர்களுக்காக தனது பொலெரோ நியோ மாடலை அறிமுகப்படுத்தியது.இது TUV300 எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.மேலும்,மஹிந்திரா தனது முதன்மை வாகனமான எஸ்யூவி 500 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை எக்ஸ்யூவி 700 என பெயரிடப்பட்ட புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

7 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago