நடிகர் தனுஷ் நடிப்பில் சிங்கம் தனுஷுக்கும் பிடித்த உணவு மேகி அவரது நகைச்சுவை திறமையை என அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்சநட்சத்திரமாக வளர்ந்துவருபவர் தனுஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதனை போல் ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா அல்லது ஓடிடி இணையதளத்தில் வெளியாகுமா என்று எந்த ஒரு அறிவிப்பும் படக்குழுவினர் வெளியீடவில்லை.
இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனுஷுடன் நடிப்பது குறித்து நடிகை மாளவிகா மோகனன் சில விஷியங்களை கூறி பாராட்டியுள்ளார்.
ஆம், மாளவிகா மோகனன் கூறுகையில், தனுஷ் நடிப்பில் சிங்கம் தனுஷுக்கும் பிடித்த உணவு மேகி அவரது நகைச்சுவை திறமையை என அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் கழித்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்க செல்லவுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…