வளமாக வாழ்வு தரும் மாசிமகம்..!தோஷம் நீக்கும் நீராடல்..தடைகள் அகற்றும் மகம்

Published by
kavitha

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு நட்சத்திர தினமும் மிக சிறப்பாக கருதப்படுகிறது. என்றாலும் அதில்  மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் ஆனது ஆன்மீகத்தில் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒரு தினமாகவே பார்க்கப்படுகிறது.சரி இந்த தினத்தில்  நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

 

Image result for மாசிமகம்

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்ற ஒரு பழமொழி தற்போது வழக்கில் உள்ளது. மகம் நட்சத்திரமானது நவகிரகங்களில் ஞானகாரகன் என்று அழைக்கப்படுகின்ற கேது பகவானுக்குரிய நட்சத்திரம் என்பதால் தான் மாசி மக தினத்தன்று இறைவழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டால் சுகங்கள் கிடைப்பதோடு, ஞானக்காரனின் அருளால் ஞானம்  கிடைக்கும் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மோட்சம் என் கிற பிறவாமை பாக்கியத்தை அருள்கிறார் கேது பகவான்.


இதுமட்டுமில்லை இன்றைய  தினத்தில் சந்திரனும் அருளுகிறார். சந்திரன் மற்றும் கேது பகவான் ஆகிய இருவர்களின் அருளாசிகளையும் வழிபாடு மூலமாக பெறலாம். மாசி மகத்தில் தான் தட்சனுக்கு மகளாக பார்வதி தேவி தாட்சாயிணியாக  அவதரித்தாள்.இதே தினத்தில் தான் அழகன் முருகன் தந்தை சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். இதுமட்டுமில்லை கடலில் இருந்து  வராக அவதாரம் எடுத்து திருமால் பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது நாளும் இதே மாசி மகம் தினம் தான் என்றால் எத்துணை பெருமையும் சிறப்பு வாய்ந்த மகம் ஆகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எனவே இந்நாளில் சிவ, வைணவ கோயில்களில் வெகு விமர்சையாக சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். மேலும் கும்பகோணத்தில் மாசி மகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை  இதே தினத்தன்று “மகாமகம்” விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

சிறப்பு வாய்ந்த மாசி மகம் தினத்தன்று அதிகாலையிலே எழுந்து குளித்தால் நீர்நிலைகளில் நீராடிய பலன் கிடைக்கும்.மேலும் இந்த  தினத்தில் புண்ணிய நதிகள் மற்றும் கடல் போன்றவற்றில் நீராடினால் தோஷங்கள் நீங்குகிறது.அதே போல் புண்ணிய தீர்த்த தலங்களில் மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை செய்வதால் பித்ரு தோஷங்கள் அடியோடு நீங்குகிறது.

விரதமும்.,பலனும்:

 மாசி மகம் தினத்தில் காலை இருந்தே உணவு ஏதும் உட்கொள்ளாமல் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை மனமுருக வழிபட வேண்டும், கோயிலில் இன்று  நடைபெறும் தீர்த்தவாரி போன்ற விழாக்களில் கலந்து கொண்டு த்ங்களால் முடிந்த உதவிகளை செய்வதால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று உங்கள் முடிந்த வகையில் அன்னதானம், ஆடை தானம் ஆகியவைகளை செய்தால் குடும்பத்தை பீடித்த தோஷங்கள், தீர்க்கமுடியாத குலசாபங்கள் நீங்கும். கல்விதடை, திருமண தாமதம், குழந்தையின்மை போன்றவைகள் நீங்கி விரைவில் இவற்றில் நல்லது நடக்கும்.அற்புதமான இன்றைய தினத்தை இழந்துவிடாதீர்கள் இறைவழிபாட்டில் மனதை லயிங்கள்…அரோகரா..

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

21 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago