புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியாகிறதா மாஸ்டர் டிரைலர்.!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிரைலரை ஜனவரியில் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .
தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தது .இந்த படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் டிரைலரை புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .அதாவது மாஸ்டர் படத்தின் டிரைலர் 2021-ல் ஜனவரி 1-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த புத்தாண்டு ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025