நேற்று வருடம் பிறந்த உடன் பலரும் பலவிதமான உறுதிமொழிகளை மேற்கொண்டிருப்பர். ஆனால், அதனை இரண்டு நாள்கள் கடைபிடித்து விட்டு, அடுத்த மூன்றாவது நாள் தங்களுக்கு அலுத்துபோய்விட்டதே என மீண்டும் பழைய பழக்கவழக்கங்களை தொடர்ந்து மேற்கொள்வது வழக்கம். அதனை தவிர்த்து காலை எழுந்தது முதல் நல்ல பழக்க வழக்கங்களை செய்ய என்ன கடைபிடிக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.
அதாவது, காலையில் விரைவாக எழுந்து குளித்து நம் வேலைக்கோ, தொழிலுக்கோ, பள்ளிக்கோ செல்லும் போது அதற்கு முன்னரே இறைவனை ஒரு நிமிடமாவது பிரார்த்திக்க வேண்டும். அப்படி நாம் பிரார்த்திக்கும் போது எனக்கு கேட்டதே நடக்கக்கூடாது. கெட்டது விலகிவிட வேண்டும். கெட்ட எண்ணங்கள் எழ கூடாது. பிரச்சினைகள் வேண்டாம் என இறைவனை பிரார்த்திக்கும் போது வேண்டாம் வேண்டாம் என எதிர்மறை எண்ணங்களை காலையிலேயே நம் மனதிற்குள் விதைக்க கூடாது.
அதற்கு பதிலாக நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். நல்லது நடக்க வேண்டும், இன்றைய நாள் சிறப்பாக அமைய வேண்டும். என்பதை மட்டும் வேண்டி கொள்ளுங்கள். இது நேர்மறை எண்ணங்களை நமக்குள் விதைக்க உதவும். நாம் வேண்டாம் வேண்டாம் என நமக்கு நடக்காத ஒரு விஷயத்தை காலையிலேயே நம் மனதிற்குள் சொல்லி நம் மனதை குழப்ப கூடாது.
அவ்வாறு அன்று என்ன நடந்தாலும் நம் வேண்டாம் என்று சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வரும். அதனை தவிர்க்க வேண்டும் என வேண்டிக்கொள்வதன் மூலம் நமக்கு அன்று நடக்கும் அனைத்தும் நல்லதாகவே தெரியும். கெட்டது நடந்தாலும் அதில் என்ன நல்லது இருக்கிறது என்பதை மனம் யோசிக்கத் வைக்கும். அந்த எண்ணங்கள் உங்களை அந்த கேட்டதில் இருந்து விடுபட்டு அடுத்து என்ன செய்யலாம் என்பதை சிந்திக்க வைக்கும்.
பலருக்கு நேர்மறை எண்ணங்களையும் எதிர்மறை எண்ணங்களையும் மனதில் வைத்து குழப்பிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் நேர்மறை எண்ணங்களையும் நினைக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்களையும் நினைக்க வேண்டாம். அதற்கு பதிலாக தங்களுக்குப் பிடித்த கடவுளின் நாமத்தை அதாவது, ஸ்ரீராமஜெயம், ஓம் நமச்சிவாயா, ஓம் சரவணபவ என்பது போல தங்களுக்கு விருப்பமான கடவுளின் துதியை நம் மனம் ஒரு நிலைப்படும் போது எதையும் நினைக்காமல் அதனை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அது உங்களுக்கு கெட்டது நடக்க விடாமல் தடுத்துவிடும். மனம் கெட்ட எண்ணங்களை நோக்கி செல்லாது. தானாகவே நேர்மறை எண்ணங்கள் உங்கள் மனதிற்குள் எழ ஆரம்பித்துவிடும்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…