தனது டீனேஜ் மகளை உயரமாக்க ஒரு நாளைக்கு 3000 முறை ஸ்கிப்பிங் செய்ய வைத்துள்ளார் தாய் ஒருவர்.
சீனாவில் உள்ள ஜென்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தாய் தனது மகளை உயரமாக வளர்க்க உடற்பயிற்சி செய்ய முடிவு செய்திருந்தார். அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியால் அந்த மகள் தற்போது முழங்கால் பாதிப்பு அடைந்துள்ளார். ஹாங்சோவை சேர்ந்த 13 வயது சிறுமி யுவான்யுவானை அவரது தாயார் தினமும் 3000 முறை ஸ்கிப்பிங் கயிறு குதிக்கும்படி கூறியுள்ளார்.
இதை செய்வதால் அந்த சிறுமியின் உயரம் அதிகரிக்கும் என்று நம்பியுள்ளார். அந்த சிறுமி தாயிடம் முழங்கால் அதிகமாக வலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் தாய், இது மகளின் சோம்பேறியுணர்வு என்று நினைத்து மீண்டும் உடற்பயிற்சியை தொடர வைத்துள்ளார். யுவான்யுவான் என்ற இந்தப் பெண்ணின் நீளம் 1.58 மீட்டர் மற்றும் அவளது எடை சுமார் 120 கிலோகிராம். இந்த சூழ்நிலையில், அந்த தாய் எந்த ஒரு மருத்துவரையும் கலந்தாலோசிக்காமல் கேட்ட சில விஷயங்களை வைத்து உடற்பயிற்சி அட்டவணையை உருவாக்கியுள்ளார்.
முதலில் 1000 முறை ஸ்கிப்பிங் செய்ய கூறியிருக்கிறார். இதனை அடுத்து உயரத்தை அதிகரிக்க காலம் போய்விட்டது என்று உணர்ந்து 3000 முறை ஸ்கிப்பிங் செய்ய கூறியுள்ளார். இந்த சித்திரவதையை 3 மாதங்கள் அனுபவித்த சிறுமி வலி தாங்க முடியாமல் மீண்டும் தாயிடம் முழங்கால் வலி பற்றி கூறியுள்ளார். இதன் பின்னர் தாய் அந்த மகளை அழைத்து கொண்டு மருத்துவரிடம் காட்டியுள்ளார். மருத்துவர் அந்தப் பெண்ணுக்கு இழுவை அப்போபிசிடிஸ் பாதிப்பு இருப்பதாக கூறினார்.
சிறுமியின் பரிசோதனைக்குப் பிறகு, அதிகப்படியான உடற்பயிற்சி குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும். எடையை குறைப்பதற்கு உள்ள பிற முறைகளை பற்றி எடுத்துரைத்துள்ளார். மேலும் அதிகமாக ஸ்கிப்பிங் செய்வது பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகளின் உடற்பயிற்சியுடன், அவர்களின் தூக்கம், ஊட்டச்சத்து மற்றும் மனநிலை ஆகியவற்றை கவனிப்பதும் முக்கியம் என்று மருத்துவர்கள் தெளிவாகக் தெரிவித்துள்ளார்கள்.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…