பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிரஞ்சீவி, எனது நண்பரான ரிஷி ஜி இனி இல்லை என்பது பேரழிவு. ஒரு சிறந்த நண்பர், ஒரு சிறந்த கலைஞர் மில்லியன் கணக்கானவர்களின் இதயத்துடிப்பு. இந்த இழப்பை அறிந்து என் மனம் உடைந்தது . அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…