முஷரப் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்தார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தானின் அதிபராக பதவியேற்றார்.கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார்.பின்னர் டிசம்பர் 15-ம் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.
இதை தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் அதிபராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்றதும் தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதாகவும் , நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்கும் முஷரப் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
உடல் நிலை குறைவால் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்றார். சிகிக்சைக்காக துபாய் சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. ஒரு புது விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள முஷரப் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்லாமாபாத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முஷரப் மீதான தேச துரோக வழக்கை விசாரித்து வந்தது. கடந்த 17-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் முஷரப்புக்கு தூக்கு தண்டனை அறிவித்தது. தீர்ப்பு பற்றிய முழு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்.
இந்நிலையில் நேற்று பெஷாவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வகார் அகமத் சேத் தீர்ப்பு தொடர்பாக 167 பக்கங்கள் முழு விவரத்தை வெளியிட்டார். அதில் தண்டனை விதிக்கப்பட்ட அவரது கழுத்தில் தூக்கிட்டு அவர் இறக்கும் வரை தொங்கவிட வேண்டும்.ஒருவேளை தூக்கிலிடுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டால் அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக் பகுதியில் 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…