#TamilCinema2019 : தேசிய விருதுபட்டியலில் ஓரங்கட்டப்பட்ட தமிழ் சினிமா!

Published by
மணிகண்டன்
  • தமிழ் சினிமாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட தேசிய விருது சிறந்த தமிழ் மொழி திரைப்படம் என்கிற பிரிவில் பாரம் எனும் படத்திற்கு கிடைத்தது.
  • 2018இல் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன், கானா என பல படங்கள் வெளியாகி இருந்தன.

2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு இந்த வருடம் இந்திய அரசு வழக்கம் போல தேசிய விருதினை அறிவித்தது.ஆனால் அந்த லிஸ்டில் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பெற வில்லை. அதிலும், தமிழ் சினிமாவிற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக ( கட்டாயம் தமிழ் படத்திற்குத்தான் கொடுக்க வேண்டும் ) பாரம் எனும் படத்திற்கு கொடுக்கப்பட்டது.

அந்த ஒரு விருதை தவிர தமிழ் சினிமா திரைப்படங்கள் வேறு vவிருதினை பெற வில்லை. இந்த விருது பட்டியல் வெளியானது முதல் தமிழ் சினிமா இயக்குனர்கள், விமர்சகர்கள் , பிரபலங்கள் என பலர் இதற்கு எதிராக  கருத்துக்களை பதிவு செய்தனர். ஒரு சிலர் இன்னும் 4 ஆண்டுகளுக்கு நமக்கு தேசிய விருது கிடைக்காது என வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு வெளியாகி இருந்த விஜய் சேதுபதி தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை ( பல சர்வதேச விழாக்களில் விருது பெற்றது. ), இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதீய கொடுமைகள் பற்றி படம் தெளிவாக பேசியது. தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்வியலை கற்பனை கலந்து உயிரோட்டமாக ரத்தமும் சதையுமாக பதிவு செய்த திரைப்படம்.

விஜய் – சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி இருந்த 96 அழகான உணர்வுபூர்வமான காதல் படம். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி சிவகார்திகேயன் தயாரித்திருந்த கனா. ராம்குமார் இயக்கத்தில் திரில்லர் கதையம்சத்தை மையமாக கொண்ட திரைப்படம் ராட்சசன் என பல படங்கள் வெளியாகி விமர்சகர்களையும் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்திருந்தன.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago