நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்

Default Image

பாக்.,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய அந்நாட்டு அரசு லண்டனுக்கு ‘வாரன்ட்’ அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில், 3 முறை பிரதமராக இருந்து வலம் வந்தவர் நவாஸ் ஷெரீப், வயது 70.  கடந்த, 2018 ஜூலை மாதம், ஊழல் வழக்கில் இவர்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சப்தாரும் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைச்சாலையில் இருந்த  நவாஸ் ஷெரீப்பிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.உடனடியாக சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு, ஜாமின் வழங்கியது. பிரிட்டன் தலைநகர் லண்டனில்  சிகிச்சை பெற, அனுமதி வழங்கப்பட்டது.

எனவே கடந்த ஆண்டு நவம்பரில், நவாஸ் லண்டன் சென்றார். ஆனால் 8 வாரங்களில், அவர் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் ஒரு உத்தரவினை உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரப்படி அவர் பாகிஸ்தானுக்கு இன்னும் திரும்பவில்லை.
இதற்கிடையே, வரும், 22ம் தேதி, நவாஸ் ஷெரீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாக்., வெளியுறவுத் துறை செயலரிடம், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் உதவி பதிவாளர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து  நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக்கோரி, நவாஸ் ஷெரீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷெரீப்பிற்கு எதிராக கைது வாரன்ட்டை பிறப்பித்தது. இதை பாக்., அரசு லண்டனில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளது. இதில், சட்ட ரீதியிலான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துாதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war