திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர்.!

நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார்.
நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலி கடந்த சில காலமாக இந்தியாவிற்கு எதிராக பேசி வருவதால், அவரது கட்சியில் உள்ள பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், பல மூத்த தலைவர்கள் கேபி சர்மா ஒலியை கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலிக்கு நேற்றைய தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவரை காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நிலை சரியான கேபி சர்மா ஒலி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025