ஓமைக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமைக்ரான் வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் அளவிற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், ஓமிக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரித்துள்ளது.
மேலும், 10 வாரங்களுக்கு முன்பு கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு தோன்றியதில் இருந்து, இதுவரை ஒன்பது கோடிக்கும் அதிகமானார் பாதிக்கப்ட்டுள்ளார். இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் பதிவான மொத்த பாதிப்பை விட அதிகம். கடந்த ஒரு மாதத்தில் உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93 சதவீதம் ஓமிக்ரான் வகையைச் சேர்ந்தவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், Omicron BA.1, BA.1.1, BA.1, BA.3 என்ற வெவ்வேறு மாறுபாடு வந்துள்ளன. இவற்றில், BA.1 மற்றும் BA.1.1 ஆகியவை அடையாளம் காணப்பட்ட முதல் Omicrons ஆகும். BA.2 மாறுபாடு RT-PCR சோதனையில் கூட பல முறை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விஞ்ஞானிகள் BA.2 ஐ Omicron இன் துணை திரிபு என்றுகூறினார்.
BA.2 இன் மரபணு அடையாளம் ஓமிக்ரானில் இருந்து சற்றே வித்தியாசமானது. இது சோதனை செய்வதை கடினமாக்குகிறது. RT-PCR சோதனை மூலம் கூட இந்த மாறுபாட்டைக் கண்டறிவது கடினம் என கூறப்படுகிறது. ஓமைக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், அதிதீவிரமாக பரவக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகிலேயே டென்மார்க் நாட்டில் புதிய ஓமைக்ரான் வைரஸால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டில் தினமும் பதிவாகும் கொரோனா வைரஸில் 82 % புதிய உருமாறிய ஓமைக்ரான் BA.2 என்று தெரியவந்துள்ளது. ஓமைக்ரான் வைரஸை விட 1.5 மடங்கு வேகமாக பி.ஏ.2 உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவக்கூடியது என தெரிய வந்துள்ளது.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…