SimCard [FILE IMAGE]
இந்திய தகவல் தொடர்பு துறையான DoT (Department of Telecommunications) போலி சிம்கார்டுகள் மூலமாக நடக்கும் மோசடி குற்றங்களைத் தடுக்கும் வகையில், புதிய சிம் கார்டு விதிமுறைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த புதிய விதிமுறை டிசம்பர் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதில் சிம் கார்டுகளின் மொத்த விற்பனையைத் தடை செய்தல், பாயின்ட் ஆஃப் சேல் (PoS) உரிமையாளரின் கட்டாயப் பதிவு மற்றும் சிம் கார்டு வாங்கும் நபரின் விவரங்களைப் பதிவு செய்தல் போன்ற விதிகள் உட்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
செல்போன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மட்டுமே சிம் கார்டுகளை விற்பனை செய்ய முடியும். சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, சேவை நிறுவனங்கள் தங்களிடம் இருந்து சிம் கார்டுகளை வாங்கும் விற்பனையாளரின் முழு விவரங்களை ஆய்வு செய்து, அவர்களுடன் ஒப்பந்த செய்து கொள்ள வேண்டும்.
இது போல ஒப்பந்தம் செய்யாமல் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மேலும், விற்பனையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்களின் லைசென்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும்.
புதிய சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையார்களின் தகவல்களை இ-கேஒய்சி (KYC) முறையில் பதிவு செய்ய வேண்டும். இது புதிய சிம் வாங்குபவருக்கும் ஏற்கனவே உள்ள எண்ணில் புதிய சிம் கார்டை வாங்குபவருக்கும் பொருந்தும்.
இதற்கு சிம் கார்டு வாங்கும் நபரின் ஆதார் கார்டு அவசியம். அதோடு ஒரு மொபைல் எண் இணைப்பு துண்டிக்கப்பட்டால், 90 நாட்களுக்குப் பிறகுதான் அந்த எண் மற்றொரு நபருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க சிம் கார்டுகளின் மொத்த விற்பனையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. ஆனால் வணிகத் தேவைக்காக அதிக எண்ணிக்கையில் சிம் காடுகள் வழங்கப்படும். ஒரு தனி நபருக்கு அதிகபட்சமாக ஒன்பது சிம் கார்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக 70 லட்சம் மொபைல் எண்களை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…