சிங்கப்பூரில் பிற நாட்டிலிருந்து வருபர்களுக்கு கொரோனா பரிசோதனையோடு சேர்த்து பிரீதாலைசர் என்ற பரிசோதனையும் செய்து வருகின்றனர். இந்த கருவி மூலம் கொரோனா ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை 1 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய பேராசிரியரும் அவரின் 3 மாணவர்களும் இணைந்து மூச்சுக்காற்று வழியாக ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவியை கண்டுப்பிடித்து உள்ளனர். மேலும், இந்த கருவியை பயன்படுத்துபவர், இதில் உள்ள சிறிய குழாயை வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊத வேண்டும். பின்னர் மூச்சுக்காற்று உள்ளே சென்று காற்றில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் ஸ்பெக்ட்ரோமீட்டர் வழியாக தெரிவித்துவிடும்.
இதை, தயாரித்த இந்திய பேராசிரியரின் பெயர் டி வெங்கி வெங்கடேசன், மற்றும் அவருடைய 3 மாணவர்கள் டாக்டர் ஜியா ஹூனன், டு ஃபாங், வேனே வீ ஆகியோர் ப்ரீதாநிக்ஸ் நிறுவனத்தை தொடங்கி அதில் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த கருவியை வைத்து பரிசோதனை செய்ய சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், சிங்கப்பூருக்குள் மற்ற நாட்டிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையோடு சேர்த்து இந்த பிரீதாலைசர் பரிசோதனையும் செய்து வருகின்றனர்.
மேலும், இப்போது ஆன்டி ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்வதன் மூலம் 30 நிமிடத்தில் முடிவு கிடைக்கும். அதே நேரத்தில், ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலமாக கொரோனா பரிசோதனை செய்தால் முடிவு கிடைப்பதற்கு சில மணிநேரங்கள் ஆகும். ஆனால், இந்த பிரீதாலைசர் கருவி ஒருவரின் மூச்சுக்காற்று வழியாக 1 நிமிடத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை தரும்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…