மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்தாண்டு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70 % விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்தாண்டு வெளியாகிறது என லைகா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்காக காத்துள்ளனர்.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஒளிபதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…