தென் கொரியாவுடன் தொடர்புகொள்ள உதவும் கேசோங் தொடர்பு அலுவலகத்தை, வட கொரியா வெடிவைத்துத் தகர்த்துள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றம் உருவாகியுள்ள நிலையில், வடகொரியாவில் இருந்து தப்பிய சிலர் தங்களுக்கு எதிராக தென் கொரியாவில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் அனுப்பி வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களை அனுப்புவதாக வடகொரியா கூறியது. இதனால், வடகொரிய அதிபர் தங்கை கிம் யோ ஜோங், தென் கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
மேலும், எல்லையில் உள்ள தகவல் தொடர்பு அலுவலகத்தை மூடப்போவதாகவும் கூறினார். கடந்த வாரம் வடகொரியா ,தென் கொரியாவுடனான அனைத்துத் தொடர்புகளையும் நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில், கேசோங் பகுதியில் மூடப்பட்டு இருந்த இருநாட்டு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் 2018-ம் ஆண்டு நிறுவப்பட்ட தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிவைத்துத் தகர்த்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…