அறிமுக பெண் இயக்குநரின் படத்தில் நடிக்கும் ஓ மை கடவுளே பட பிரபலம்
அசோக் செல்வனின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் வாணி போஜன் மற்றும் ரித்திகாசிங் ஆகிய இரண்டு பேர் கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அசோக் செல்வன். தற்போது இவர் பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம். இந்த நிலையில் தற்போது, அசோக் செல்வன் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.
இந்த படத்தின் மூலம் ஸ்வாதினி முதன்முதலாக பெண் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நிஹாரிகா கொனிதேலா நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…