ஃபைசர் கொரோனா தடுப்பூசி! அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த மெக்சிகோ!

ஃபைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிக்கு கோஃபெரிஸ் அவசர அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று துணை சுகாதார மந்திரி ஹ்யூகோ லோபஸ் – கேடெல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைராசை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காயாவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிலையில், இந்த தடுப்பூசி வெற்றியையும் கண்டுள்ளது.
இந்நிலையில், ஃபைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிக்கு கோஃபெரிஸ் அவசர அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று துணை சுகாதார மந்திரி ஹ்யூகோ லோபஸ் – கேடெல் ஒரு செய்தி மாநாட்டில் கூறியுள்ளார். இதனையடுத்து, மெக்சிகோ ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நாங்காவது நாடாகும். ஏற்கனவே, பிரிட்டன், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவின் அரசாங்கம், ஏற்கனவே ஃபைசருடன் 34.4 மில்லியன் டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில், முதல் தொகுதி இந்த மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025