கொரோனாவே குறையாத சூழலில் அமெரிக்காவில் அணில் ஒன்றுக்கு “பிளேக்” தொற்று உறுதி!

Published by
Surya

அமெரிக்காவில் ஜூலை மாதம், 11-ம் தேதி அன்று அணில் ஒன்றுக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் பிளேக் தொற்று உறுதியானது தெரியவந்தது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், “இந்த வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை” என கொரோனா வைரஸின் வீரியம் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

மேலும், உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. “பிளேக்” எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பரவிவருகிறது.

“மர்மோட்” எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. இதனால் அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிகுறிகள், மூச்சுத்திணறல், தீவிர காய்ச்சலே ஆகும். மேலும் இதை கவனிக்கவில்லை என்றால் அந்த வைரஸ் தொற்று, சம்பந்தப்பட்ட நபருக்கு 24 மணி நேரத்தில் உடல் முழுக்க பரவி, உயிரிழக்க வாய்ப்புள்ளகாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு அணிலுக்கு பிளேக் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மோரிசன் எனும் இடத்தில் ஜூலை மாதம், 11-ம் தேதி அன்று அணில் ஒன்றுக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் பிளேக் தொற்று உறுதியானது தெரியவந்த நிலையில், அம்மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

3 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

4 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

5 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

6 hours ago