போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நந்திதாவின் IPC376 படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கில் மிரட்டலாக வெளியாகியுள்ளது.
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா தற்போது சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் இவருடன் மதுசூதன் ரயோ, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராம்குமார் சுப்பராயன் எழுதி இயக்கும் IPC376 படத்தினை எஸ். பிரபாகர் தயாரிக்கிறார். யாதவ் ராமலிங்கம் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள IPC376 படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக துணிச்சல் உள்ள கதாபாத்திரத்தில் மர்மம் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…