கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட தபால் வாக்குப்பதிவு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இலங்கையில் நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு எந்த வன்முறையும் இல்லாமல், நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது.
இலங்கை முழுவதும் சுமார் 10,000 சுகாதார அதிகாரிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தபால் வாக்குபதிவு மொத்தம் 5 நாட்கள், 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தவறும் அரசு ஊழியர்கள், 2ம் கட்டமாக அடுத்த வாரம் 2 நாட்கள் நடைபெறும் தபால் வாக்குப்பதிவில் வாக்களிக்கலாம்.
இந்த தபால் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…