அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் அஜித்திற்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.
இந்த நிலையில் 500 நாட்களுக்கு மேலாக வலிமை படத்தின் அப்டேட் வராததால் ரசிகர்கள் அப்டேட் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த நிலையில், வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த 15 ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு காட்சிகள் மீதமுள்ளதாகவும் அந்த கடைசி கட்ட கட்சியை வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் எடுப்பதற்காக வலிமை படக்குழு ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வலிமை படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடாமல் நேரடியாக நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த படத்தை 2020 தீபாவளிக்கு வெளியீடவுள்ளதாக போனிகபூர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…