தமிழ் சினிமாவில் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இவர் தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புகளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார்.
அவர் வீட்டில் இருப்பதை விட இந்த பிரசாத் ஸ்டுடியோவில் தான் அதிக நேரத்தை செலவிடுவார். இதனால், அவரை எப்போது பார்க்க வேண்டுமென்றாலும் பிரசாத் ஸ்டுடியோவில் பார்க்கலாம் என்ற பேச்சு திரைத்துறையில் உலாவரும்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய உரிமையாளர் ( பிரசாத் அவர்களின் பேரன்) அந்த இடத்தை விட்டு இளையராஜாவை காலி செய்ய சொல்லியுள்ளார். இதற்கு இளையராஜா தரப்பு மறுப்பு தெரிவித்து, அதற்கு வாடகை தருவதாக தெரிவித்தனர்.
ஆனால், இதற்கு பிரசாத் ஸ்டூடியோ தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதனால், இன்று பிரசாத் ஸ்டுடியோவில் இயக்குனர் பாரதிராஜா, சீமான், பாக்யராஜ் ஆகியோர் பாரதிராஜா ஆகியோர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்றனர். ஆனால், அங்கு அவர்களை அலுவலகத்திற்கு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் அங்கு, இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த இடமே மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…
திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…