பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .
மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தில் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கேஎஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் பிரசாந்துடன் அவர் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…