இயக்குனர் சர்ஜுன் கே.எம் இயக்கும் புதிய படத்தில் டிவி ரிப்போர்ட்டராக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய ததிரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆம், அந்த படத்தை நயன்தாராவை வைத்து ஐரா படத்தை இயக்கிய சர்ஜுன் கே.எம் இயக்கவுள்ளதாகவும், திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் டிவி ரிப்போர்ட்டராக நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…