புரோட்டின் சத்து நிறைந்த பருப்பு புட்டு…. எப்படி செய்வது தெரியுமா?

Published by
Rebekal

மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது உங்கள் குழந்தைகளுக்கு சுவையாகவும் சத்தாகவும் உள்ள ஒரு ரெசிபி செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் பருப்பு புட்டை செய்து கொடுங்கள். அதிக புரோட்டீன் கொண்ட இந்த பருப்பு புட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பருப்பு புட்டை  எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • கடலைப்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • புழுங்கல் அரிசி
  • உப்பு
  • சர்க்கரை
  • ஏலக்காய்த்தூள்
  • முந்திரி
  • தேங்காய்
  • நெய்

செய்முறை

முதலில் அனைத்து பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை சேர்த்து 2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அவற்றை நன்றாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் வேகவத்த பருப்பை எடுத்து புட்டு போல உதிர்த்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள புட்டை நெய் வறுத்த முந்திரியுடன் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சர்க்கரை பாகு ஏலக்காய் பவுடர் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால் அட்டகாசமான பருப்புக் புட்டு வீட்டிலேயே தயார். நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை இதைச் செய்து கொடுத்துப் பாருங்கள்.

Published by
Rebekal

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

43 minutes ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

1 hour ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

2 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

2 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

5 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

5 hours ago